மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்தியது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த விக்னேஸ்வரன் மயிலாடுதுறையில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். செவ்வாய்கிழமை இரவு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 19 பேர், பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை கடத்திச் சென்றனர்.
அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்னேஸ்வரன் உள்பட 7 பேரை கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.