ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றின் கரையோரங்களில் இருந்த மக்கள் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.