25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட பிராண்ட் மற்றும் நான்-பிராண்ட் அரிசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் கூடுதலாக ஒரு கிலோ சேர்த்து 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர்.
அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிப்பை சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் 26 கிலோ பேக்கிங் செய்த அரிசி பைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பேக்கிங் செய்யும் போது மக்களுக்கு 50 ருபாய் குறைவாக கொடுக்க முடியும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.