கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இரு தரப்பினர் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
செல்லியம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவதில், அக்கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்சனை எழுந்தது.
இதையடுத்து ஆத்தூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த போதே, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் வட்டாட்சியர் அலுவலகமே போர்க்களமானது.
இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.