கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளும் ஆய்வுக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த 3 பேர் அடங்கிய ஜிப்மர் மருத்துவ குழுவிடம் உடற்கூறு ஆய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர்.
இதனை ஆய்வு செய்யும் மருத்துவக் குழுவினர், இதுதொடர்பான தங்களது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.