வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றபின் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. என்றால் தாங்கள் தான் என்றும், கோவை செல்வராஜ் எந்த கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்றார் என தெரியவில்லை என்றும் கூறினார்.
தேர்தல் ஆணையத்திடம் பெற்ற ஆர்.டி.ஐ. தகவலில், கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் ஓ.பி.எஸ். ஆதரவாளரான கோவை செல்வராஜ் குறிப்பிட்டார்.