தமிழகத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்தாலும் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே படிப்பை தொடருவதை பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு முழுகல்வி கட்டண விலக்கும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு பாதி கல்விக்கட்டண விலக்கும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.