கெத்து காட்டுவதாக நினைத்து, திருவாரூர் மாவட்டம் பேரளம் பேருந்து நிறுத்தத்தில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி அட்டகாசம் செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மாதவன் என்ற இளைஞரின் பிறந்தநாளைக் கொண்டாட பேருந்து நிறுத்தத்திற்கு வந்த இளைஞர்கள், கேக் வெட்டி கத்திக் கூச்சலிட்டு, பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து அஜய் குமார், மணிகண்டன், விஷ்ணு, பிரசாத் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பர்த்டே பாய் மாதவன் மற்றும் மோகன்ரஜை தேடி வருகின்றனர்.