திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டது.
2020 ஆம்ஆண்டு முதல் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ONGC நிறுவனம் புதிய கிணறுகள் அமைக்கவும், ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் இனி செயல்படக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இதுதொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான முன் ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகே முடிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.