திருவாரூர் மாவட்டம் ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் கார்த்திகை சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்தப்பள்ளியில் படிக்கும் ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளிடம் கணித ஆசிரியர் அத்துமீறி நடப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். உரிய விசாரணைக்கு பிறகு கணித ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.