திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஒருமாதமாக பீரிசர் பாக்சில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை வட்டார மருத்துவ அலுவலர் பறிமுதல் செய்தார்.
ஜண்டா தெருவில் இயங்கி வரும் கடையில் உணவு உண்ட வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
தகவலின் பேரில் குறிப்பிட்ட கடையில் சோதனை நடத்திய வட்டார மருத்துவ அலுவலர், பீரிசரில் கவரில் சுற்றப்பட்ட இருந்த கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்தார்.