கோயம்புத்தூர் அருகே தனியார் வங்கியில் அதிக பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் 15 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஜோதிபுரம் பகுதியில் ராணி மற்றும் பாக்கியலெட்சுமி இருவரும் அருகருகே வசித்து வந்த நிலையில், தனியார் வங்கியில் தனது மகன் சதுர்வேதகிரிநாதன் பணிபுரிந்து வருவதாகவும், அவரின் வங்கியில் பணத்திற்கு அதிக வட்டி பெறலாம் எனவும் பாக்கியலெட்சுமி கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராணி கடந்த 2016-ஆம் ஆண்டு 15 லட்சத்தை கொடுத்த நிலையில், பணம் செலுத்தியதற்கான போலி ரசீதையும் கொடுத்துள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், 2 ஆண்டிற்கு முன்பு இருவர் மீதும் போலீசில் புகார் அளித்தார்.