கள்ளக்குறிச்சி அருகே கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.
நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஜூலை 27 ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் என்றும், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 9,10,11,12 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காலை முதல் கூகுள் மீட் மூலம் அனுப்பப்பட்ட இணைப்பு வாயிலாக மாணவர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர்.