கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு தொடர்பாக கனியாமூர் தனியார் பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், அவரது பெற்றோர் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பள்ளி விடுதியில் மாணவி கீழே விழுந்ததாக கூறப்படும் இடத்தையும், மூன்று மாடிகள் கொண்ட கட்டிடத்தின் அனைத்து தளங்களையும், வன்முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சான்றிதழ்கள், பேருந்துகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.