திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவிப் பெறும் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 7 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிக்கு மூன்றாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் கண்ணீர் புகை குண்டு வாகனமும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.