கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினிலாரி மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த சதீஷ், தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். குமரன்குன்று அருகே அன்னூர் நோக்கி வந்த மினிலாரி திடீரென சாலையின் வலதுபுறமாக திரும்பிய நிலையில், வாகனத்தில் பக்கவாட்டு பகுதியில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சதீஷ் படுகாயமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.