மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் முழுவதும் அதிவேக 5ஜி இன்டர்நெட் சேவை கொடுக்கப்பட இருப்பதுடன், வீரர்களுக்காக இரண்டாயிரம் சிம்கார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
போட்டி நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் பேசிய அவர், இதுவரை 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.