சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், விழா மேடை செஸ் காய்களுடன் கூடிய குன்று போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரங்கம் முழுவதும் செஸ் காய்களாலும், செஸ் கட்டங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. AR மற்றும் VR தொழில்நுட்பத்துடன் கூடிய 10 நிமிட காட்சிகள் ஒளிபரப்புவதற்கான திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழையு வாயில் பகுதிகளில் செஸ் காய்கள் வடிவ வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிலையில், அரங்கம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் அரங்கம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.