ராமநாதபுரம் சிங்கனேந்தல் கிராமத்தில் முறையற்ற காதலை தட்டிக்கேட்ட கணவனை கள்ளக்காதலர்கள் மூலம் படுகொலை செய்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்கனிக்கு சாந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். பிழைப்புக்காக பிச்சைக்கனி வெளிநாடு சென்றுவிட, மனைவி சாந்திக்கு சகோதரர்கள் முறையுள்ள பார்த்திபன், கலை மோகன் என்ற இருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கணவன் பிச்சைக்கனி, மனைவி சாந்தியின் தகாத உறவை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தி தனது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
இதன்படி பிச்சைக்கனியை மது வாங்கி கொடுத்து கடத்தி சென்ற கள்ளக்காதலர்கள் அவரை கருவேலங்காட்டிற்குள் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.