தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி உட்பட ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஜூலை 27 அன்று தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 28, 29 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.