கள்ளக்குறிச்சி மாவட்ட கனியாமூரில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின் போது கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 17ஆம் தேதி பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின் போது 141 இரு சக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். வாகனங்களை திரும்பப் பெற வருபவர்கள் கைது செய்யப்படலாம் என கருதி இதுவரை யாரும் காவல் நிலையத்தை அணுகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகன பதிவெண்களை கொண்டு உரிமையாளரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.