போலி பாஸ்போர்ட் வழக்கில் மதுரை கியூ பிரிவின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 பேர் மீது நீதிமன்றத்தில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு மதுரையில் இலங்கையை சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட்டுகள் மூலம் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்படி,124 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் இதுவரை 4 இலங்கைத் தமிழர்கள், 11 பயண முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 போலீசார் உட்பட 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.