காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே 15 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது.
திருப்புலிவனம் கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பிலான அரசு நிலத்தை சுப்பையா என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகத் தெரிகிறது.
உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றாத நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர்.