சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, வருகிற 28 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்கவிழா ஏற்பாடுகளை பார்வையிட்டப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூலை 24 ஆம் தேதிக்கு முன்பாக முன் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.