சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழ வியாபாரியை கடத்தி வருமாறு கூறி 5 ரவுடிகளை ஏவிய காவல்துறை ஏட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
தில்லைநகரில், காரில் ஆயுதங்களுடன் வலம் வந்த 5 ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரித்த போது, சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டாக உள்ள ராமமோகன் என்பவர் கூறியதன் பேரில் பழ வியாபாரி அன்பரசன் என்பவரை, கடத்தி செல்ல வந்துள்ளது தெரியவந்தது.
ராமமோகனும், அன்பரசனும் சேர்ந்து பழ வியாபாரம் செய்த போது, ராமமோகன் 45 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி அன்பரசனுக்கு கொடுத்ததும், பணத்தை திருப்பி தர அன்பரசன் மறுத்ததால், அவரை ஆள் வைத்து கடத்தி பணத்தை வசூலிக்கத் திட்டமிட்டிந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ஏட்டு ராமமோகனை போலீசார் தேடி வருகின்றனர்.