சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்விற்கு வருவதாக இந்து சமய அறநிலைத்துறை அனுப்பிய கடிதத்திற்கு, தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.
வரும் 25ஆம் தேதி அன்று நகை சரிபார்ப்பு ஆய்விற்கு வரவுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு கடந்த 19ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த அவர்கள், கோவில் நகைகள் உள்ள அறையின் சாவி 20 பேர் பொறுப்பில் உள்ளதாகவும், தீட்சிதர்கள் சிலர் வெளி மாநிலத்தில் உள்ளதாலும், ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு பின் முன்கூட்டியே தெரிவித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.