சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மாமூல் தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகனை கத்தி முனையில் கடத்திச் சென்று சித்ரவதை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனகாபுத்தூரில் மளிகைக் கடை நடத்தி வரும் சசிகுமாரின் மகன் யோகேஸ்வரனை கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல், பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது.
கஞ்சா போதையில் அவர்கள் அனைவரும் உறங்கிய நேரத்தில் தப்பிய யோகேஸ்வரன் போலீசில் அளித்த புகாரின் பேரில், பல்லாவரம் பாலம் அருகே பதுங்கி இருந்த டைசன், ஜெய்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.