கள்ளக்குறிச்சியில் கலவரம் ஏற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில், அருகிலுள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக , மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்டுள்ள பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.