வெளியூரைச் சேர்ந்த சில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகத்தில் ஆலோசனை நடத்திய மீனவ நிர்வாகிகள், அதிக திறன் கொண்ட என்ஜின்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.