செங்கல்பட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு ஆலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு வில்லியம்பாக்கம் சாலையில் நேற்றிரவு லாரி சென்று கொண்டிருந்து.
திடீரென லாரியின் முன்பகுதியில் இருந்து புகை எழுந்ததைக் கண்டு சுதாரித்து கொண்ட ஓட்டுநர் மகிமை தாஸ், உடனடியாகக் கீழே இறங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது.