சென்னை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் பிடிபட்ட விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சோதனையில் இதுவரை 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க், இரண்டு லேப்டாப், ரொக்கப் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள், ஒரு இலங்கை பாஸ்போர்ட் மற்றும் சில தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.