12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலில் தவறிழைத்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வுத்துறை இணை இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.
+2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை மாணவர்கள் சரி பார்த்தபோது தாங்கள் பெற்றதை விட குறைவான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
85 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, மதிப்பெண் கூட்டலில் ஏற்பட்ட தவறால் 55 மதிப்பெண்கள் என்றும், 76 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வெறும் 6 மதிப்பெண்கள் என்றும் பதிவு செய்யப்பட்டிந்ததாக கூறப்படுகிறது.
மதிப்பெண் கூட்டலில் தவறிழைத்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேர்வுத்துறை இயக்கம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.