கும்பகோணம் மாவட்ட நடுவர் நீதிமன்றம் அருகே நிறுத்தப்பட்டிருந்த விசிக பிரமுகரின் கார் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த கட்சியைசேர்ந்த அலெக்ஸ் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தால். நீதிமன்றம் அருகே காரை நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து காரில் இருந்து புகை வருவதை பார்த்த ஓட்டுநர் அருகில் சென்று பார்த்த போது சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் தெரிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் எரிந்த காரினை அணைத்தனர்.இதனிடையே கும்பகோணத்தைச் சேர்ந்த, அதிமுகவை சேர்ந்த சேவல் ராஜா என்பவருக்கும் அலெக்ஸ்கும்ஏற்கனவே முன் பகை இருந்து வந்த நிலையில் சேவல் ராஜாவிற்கு சொந்தமான இரண்டு ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.