காஞ்சிபுரம் மாவட்டம், ஒரிக்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் மாணவன் 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
சக மாணவிக்கு சாக்லேட் வழங்கிய விவகாரத்தில் மாணவனை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பள்ளியின் தாளாளர் அருண் குமார், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகத்திடம் எழுதிய வாங்கிய அதிகாரிகள் மாணவரின் பெற்றோரிடம் உரிய விசாரணை நடத்திய பிறகு, ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு முழு சிகிச்சை செலவை பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி தொடர்ந்து நடைபெறும் நிலையில் 50 அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.