நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவ்விச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
குருசடி காலனியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை அங்குள்ள வியாபாரி மூர்த்தி என்பவரது வீட்டிற்குள் நேற்று இரவு நுழைந்து நாயை கவ்விச் சென்றுள்ளது.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.