தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கூடுதலான மாணவ, மாணவிகள் பங்கேற்றது சிறப்பானது என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், தொலைப்பேசியில் நீட் தேர்வு எழுதிய மாணவருக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டும் தொடரும் என்றும், நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு ஒரே நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.