கோவிட் தொற்று காரணமாக ஆழ்வார்ப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணம் அடைந்தார்.
இன்று வீடு திரும்பும் நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டு கொண்டதால் இந்த கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது நலன் குறித்து விசாரித்த தலைவர்கள், கட்சியினர் தமக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.