குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவின்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிங்க் நிற வாக்குச் சீட்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை மாலையே வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.