ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் கிராம வங்கியில் போலி நகைகளை 25 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து வங்கியின் நகை மதிப்பிட்டாளர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் அண்மையில் உயிரிழந்த நிலையில், புதிதாக பணிக்கு சேர்ந்த ஊழியர் நகை சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளார். 13 பேரின் நகைகள் போலி எனக் கண்டறியப்பட்ட நிலையில் உரியவர்களை அழைத்து வங்கி ஊழியர்கள் விசாரித்துள்ளனர்.
விசாரணைக்கு வந்தவர்களில் சிலர் தாங்கள் நகை அடகு வைக்கவில்லை என்றும், முன்னாள் நகை மதிப்பீட்டாளர் பிரகாஷ் அறிவுறுத்தலால் அவர் வழங்கிய நகையை அடகு வைத்ததாகவும் மற்ற சிலரும் கூறியதாகக் கூறப்படுகிறது.
நகை போலி குறித்த தகவல் வெளியே கசிந்த நிலையில், மற்ற வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.