விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக மண் தோண்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திவேல் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.