விழுப்புரம் அருகே, நிலத்தகராறில் உடன்பிறந்த சகோதரியையும் அவரது கணவரையும் நடுரோட்டில் துரத்தி துரத்தி பட்டாக்கத்தியால் வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயந்தூரைச் சேர்ந்த ராஜ சுலோச்சனாவுக்கும் அவரது சகோதரர் அரிகிருஷ்ணனுக்கும் இடையே, இருவரது நிலத்திற்கு நடுவே செல்லும் ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், அரிகிருஷ்ணனை ராஜ சுலோச்சனாவின் கணவரும், மகனும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன், ஆயந்தூர் பேருந்து நிலையம் அருகே கையில் பட்டாக் கத்தியுடன் சென்று ராஜசுலோச்சனாவையும் அவரது கணவரையும் துரத்தி துரத்தி பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அரிகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.