பொது பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்ட சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎஸ்ஆர் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக வி ஜி சந்தோசத்தின் மகன், உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல விஜிபி நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பல்வேறு மனைபிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் பொது பயன்பாட்டிற்காக, அரசுக்கு வழங்கிய ஓஎஸ்ஆர் தான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக விஜிஎஸ் அமலதாஸ் ராஜேஷ் மற்றும் சார்பதிவாளர்கள் சுரேஷ் மற்றும் ரவி ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட அமலதாஸ் ராஜேஷ் என்பவர், வி ஜி சந்தோசத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.