மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடர்பாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரக் குழுக்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதாரக் குழுக்கள், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் வீரர்களையும், பார்வையாளர்களையும் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.