அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகிதம் ஜிஎஸ்டியை திரும்பப் பெற வலியுறுத்தி கரூர், சேலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கரூரில் அரிசி ஆலைகள், அரிசி மொத்த மற்றும் சில்லரை கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் மற்றும் தானிய மண்டிகள் என ஆயிரத்து 200 வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ளன.
சேலத்தில் ஆயிரத்து 500க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.