தாம்பரம் கேம்ப் ரோட்டில் உள்ள "குவாலிட்டி" என்ற அசைவ உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர் சுமார் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும், 5 கிலோ கெட்டுப்போன அரிசி மற்றும் நூடுல்ஸையும் பறிமுதல் செய்தனர்.
அந்த உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், இறைச்சி உள்ளிட்டவற்றை நீண்ட நாட்கள் குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தியதும், இறைச்சிகளில் அதிகளவில் ரசாயனங்களை கலந்து பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து உணவகத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.