சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாக சில வாரங்கள் ஆகலாம் என்பதால், மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள வேண்டாம் என பல்கலைக்ககழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூஜிசி கடிதம் எழுதியுள்ளது.
Term 1, Term 2 என இரு கட்டங்களாக சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இரண்டையும் சேர்த்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு ஒரு மாதம் வரை ஆகலாம் என யூஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சில பல்கலைக்கழகங்கள் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகே நிர்ணயிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.