கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீர் கலந்து நுரை பொங்க, தண்ணீர் ஓடுகிறது.
கர்நாடகாவின் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கெலவரபள்ளி அணைக்கு தண்ணீர் வரும் நிலையில், மழையை பயன்படுத்தி, ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக கெலவரப்பள்ளி அணை நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசாயன கழிவுகள் கலந்து குவியல் குவியலாக நுரை பொங்கியபடி தண்ணீர் ஓடுகிறது.