தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளில் அதிகளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், அப்பணிகளில் தமிழர்களை ஈடுபடுத்தினால் தான் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்திற்கு கிடைத்த அந்நிய முதலீட்டில் 50% தொகை கட்டுமானத்திற்கு பயன்படுவடுவதாக கூறினார்.