விசா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சீன நாட்டினர் 250-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சம் ரூபாய் பெற்று விசா வழங்கி முறைகேடு செய்ததாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ விசாரணை நடத்துகிறது.
இது தொடர்பாக கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சோதனை நடந்தது.
அப்போது வீட்டில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியின் பீரோவுக்கு சாவி இல்லாததால் அதற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து சாவி பெற்றதை அடுத்து, வீட்டில் சோதனை நடைபெற்றது.