அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றியதற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகி கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவது போன்ற சூழல் வந்ததால் தான் அவரை விட்டு தாம் விலகியதாக கூறினார்.
இதனிடையே, ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து இன்று மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.